ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி? : HOW TO PAY ONLINE EB BILL ?
நம்மூரில் வரிசையில் நின்று ஏதேனும் வேலையை முடிப்பது சத்திய சோதனை மாதிரிதான். கரண்ட் பில் கட்டணங்களை ஆன்லைனிலேயே செலுத்துவது கஷ்டமா ?
இல்லை.. மிகவும் எளிதான வழிமுறைகள் கீழே கொடுத்துள்ளேன்.
1. முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான
http://tneb.tnebnet.org/newlt/consno.php
போகணும்.
பிறகு region திருச்சி தேர்வு செய்யவும்.
MY SERVICE CONNECTION NUMBER | HOME |
3. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப் பண்ணணும்.
குறிப்பு லப்பை குடிகாடு க்கு 349 உங்கள் ஊர் கோடு ஆகும்
4. சில விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
5. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
6. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன்லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம். ஒவ்வொரு முறையும் கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும். கட்டிய தொகைக்கான ரிசிப்ட் பெறுவதற்கான வசதியும் இணைய தளத்தில் இருக்கு. ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த மாத மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவும் முடியும். ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தலாம்.
நன்றி : சகோதரி நிஷா
Category: துனுக்குகள்
0 comments