பொறியியல் மாணவர்களுக்காக அண்ணா பல்கலை நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!
சென்னை: பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள், வேலை வாய்ப்பு பெறுவதற்கு வசதியாக, மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை, டிசம்பர், ஜனவரியில் நடத்த அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
பல்கலை அறிவிப்பு: அண்ணா பல்கலை கல்லூரி மாணவர்களுக்கு (கிண்டி பொறியியல் கல்லூரி உட்பட, நான்கு கல்லூரிகள்) கடந்த 6ம் தேதி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது. தொடர்ந்து, வரும் 15ம் தேதி வரை, வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் 1,200 மாணவர் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை, டிசம்பர் மற்றும் ஜனவரியில் நடத்த, துணைவேந்தர், ராஜாராம் திட்டமிட்டுள்ளார்.
இதில், அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கவும், அதிகமான மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு பல்கலை தெரிவித்துள்ளது.
Category: மாணவர் பகுதி, வேலைவாய்ப்பு
0 comments