வி.களத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!
பெரம்பலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டனர்.
பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் ராஜாஜிநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பூபாலன் (29), லாரி ஓட்டுநர். இவருக்கு மனைவி பானுமதி (21), 10 மாதக் குழந்தை காவியா ஆகியோர் உள்ளனர். பூபாலனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி மனைவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பூபாலன் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
வி.களத்தூர் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை!
தூக்கிட்டு பெண் சாவு: பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர் அருகேள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ஜெயந்தி (40). கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இதனிடையே, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஜெயந்தி அவரது வயலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின்பேரில், வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments