ஓமன் நாட்டில் மருந்தாளுனர் வேலை வாய்ப்பு! (மஸ்கட்டில் பாரமஸிட் வேலைக்கு சென்னையில் ஆட்கள் தேர்வு)
சென்னை, அக். 14:
ஓமன் நாட்டில் காலியாக உள்ள மருந்தாளுனர் வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:&
ஓமன் நாட்டிலுள்ள மருந்தக நிறுவனத்திற்கு, ஆங்கிலப் புலமை மற்றும் புரோமெட்ரிக் தேர்வு முடித்த 30 முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண் மருந்தாளுநர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.
இப்பணிக்கு வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு, எண்.42, ஆலந்தூர் சாலை, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை&32 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம்.
Category: வேலைவாய்ப்பு
0 comments