பெரம்பலூர் அருகே திருட சென்றவர் கிணற்றுக்குள் விழுந்து பலி!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருட சென்ற ஒருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியாகியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி கிராமம் அருகே உள்ள காட்டில் விவசாய பயன்பாட்டிற்காக கிணறுகள் உள்ளது. இதில் ஒரு கிணற்றின் மேல் பகுதியில் வயர்கள் வைக்கப்பட்டிருந்திருக்கிறது.
இதை நோட்டம் விட்ட ஒருவர் அதை திருடுவதற்காக கிணற்றுக்குள் இறங்கியிருக்கிறார். அப்போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கிறார். நீச்சல் தெரியாததாலும், கிணறு ஆழமாக இருந்ததாலும் அவர் கிணற்று நீரில் மூழ்கி இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து இறந்துபோன நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.
ர.ரஞ்சிதா
(மாணவப் பத்திரிகையாளர்)
Category: மாவட்ட செய்தி

0 comments