பெரம்பலூரில் நாளை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்!
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை (அக். 16) நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளம், கைப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், ஆண்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், பெண்களுக்கான தடகளப் போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல். உள்ளிட்ட போட்டிகளும், கைப்பந்து போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வயது வரம்பின்றியும் நடைபெற உள்ளன.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்ளலாம்

Category: மாவட்ட செய்தி
0 comments