பெரம்பலூரில் வரும் நவ. 19ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்திய ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு!
பெரம்பலூர் மாவட் டத்தில் நடைபெற உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்கான பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில் நடந் தது.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி முதல் 26-ந்தேதி வரை இந்திய ராணுவத்தின் பல் வேறு நிலை பணிகளுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம் முகாமில் சான்றிதழ் சரி பார்ப்பு, உடற்தகுதி, ஓட்டப் பந்தயம், மருத்துவ தகுதிகள் குறித்த தேர்வுகள் நடைபெற உள்ளன.
இம்முகாமில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராம நாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் உள் ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த தகுதியான ஆட்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப் பட உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதை முன்னிட்டு, முகாம் நடை பெறும் இடம், ஆள் சேர்ப்பு பணிகளுக்காக வருகை தரவுள்ள ராணுவ அலுவலர் கள் தங்கும் இடம், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், உடற் தகுதித்தேர்வு, மருத்துவ தேர்வு நடத்துவதற்காக செய்ய வேண்டிய வசதிகள், பாது காப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதிகள், உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், ஆள் சேர்ப்பு முகாமிற்கு அதிக அளவிலான இளைஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் விளம்பர பணிகள் மேற் கொள்வது ஆகியவை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தரேஸ் அஹமது தலைமையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
இந்த முகாம் பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப் பாகும். இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளவர்களை தேர்வு செய்ய அனைத்து பணிகளும் மாவ ட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப் படும். நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களின் மூலமாக சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் சுற்றி உள்ள இடங்களை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்ட விளை யாட்டு அரங்கத்தை சுற்றிலும் உள்ள இடங்கள் சுத்தம் செய் யப்பட்டு ஆள்சேர்ப்பு பணி களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பு
மேலும் பாதுகாப்பு ஏற் பாடுகளில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பல்வேறு மாவட்ட இளைஞர் களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளுக்காக அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த வரு வாய்த்துறை மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் ஈடுப டுத்தப்பட உள்ளனர். எனவே மேற்கண்ட அனைத்து மாவட் டங்களை சேர்ந்த திறமையும், ஆர்வமும் உடைய இளை ஞர்கள் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பெரும் அளவில் பங்கு கொண்டு தேர்வு பெற்று இந்திய ராணுவத்தை வலுப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜன் துரை, துணை கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற் றும் சிறு பான்மையினர் நல அலுவலர் துரைமுனுசாமி, ராணுவ மருத்துவ அலுவலர் அனூஜ் சிங் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
Category: மாணவர் பகுதி, மாவட்ட செய்தி
0 comments