இது தான் இஸ்லாம் : ஹைதராபாத்தில் நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம்.....!!
ஹைதராபாத் SR நகரில் வசித்து வரும் மாணவர் அப்துல் லத்தீப். கல்லூரியில் பயின்று வரும் இவர், நேற்று காலை தனது முஸ்லிம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஓர் அரசு வங்கிக்கு சொந்தமான ATM மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
ATM கார்டை சொருகி கடவுச் சொல்லையும் அழுத்தி, அவருக்கு தேவையான ரூ 200 அழுத்தியுள்ளார். ஆனால் இயந்திரம் திடீரென திறந்துகொண்டு ரூ 26 லட்சம் சட சடவென வெளியே வந்துள்ளது.
அந்த ATM மில் கேமராவும் இல்லை, செக்கியூரிட்டியும் இல்லை.
200 ரூபாய் எடுக்க சென்ற மாணவன் அப்துல் லத்தீபுக்கு 26 லட்சத்தை கண்டும் அவனுக்கு நினைவுக்கு வந்தது கடைசி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி உரை நிகழ்த்தினார்களே....
ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடுத்தவர்களின் பொருளாதாரம் மக்காவை போன்று புனிதமானது என்று கூறினார்களே....
நபிகள் நாயகத்தின் போதனையை செயல்படுத்தும் விதமாக தன்னுடைய முஸ்லிம் நண்பனை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அருகிலிருந்த SR நகர் காவல்நிலையத்திற்கு சென்று தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக விரைந்த காவல்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
அனைவரும் அங்கு வந்து பார்த்த போது 26 லட்சமும் அங்கேயே இருந்துள்ளது. ATM இயந்திரத்தை சரி செய்தனர்.
நெஞ்சை நெகிழ செய்த உணர்ச்சிமிகு சம்பவத்திற்கு ஆளான மாணவன் அப்துல் லத்தீபை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
அல்ஹம்துலில்லாஹ்....
முஸ்லிம் என்ற பெயர் இருந்தாலே தீவிரவாதி என்று சித்தரிக்கும் ஊடகங்களே இப்பொழுது எழுதுங்கள் ஆந்திராவின் தீவிரவாதி அப்துல் லத்தீப் என்று முதல் பக்கத்தில் எழுதுங்கள்....
Category: சமுதாய செய்தி
0 comments