திருச்சி வந்த விமானத்தில் பறவை மோதியது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!
திருச்சி: இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பறவை மோதியதில்,
விபத்து எதுவும் ஏற்படாமல் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழ்மை மதியம் 2.30 மணிக்கு 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தது. சுமார் 100 பயணிகள் அதில் பயணம் மேற்கொண்டிருந்தனர். பயணிகளை இறக்கிவிட்டு விட்டு, மீண்டும் விமானம் 139 பயணிகளுடன், 3.20 மணிக்கு கொழும்புக்கு புறப்பட தயாரானது.
அப்போது விமானி இன்ஜினை ஆன் செய்த போது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வு செய்த போது, விமானம் கொழும்பில் இருந்து புறப்பட்டு வந்த போது, என்ஜினில் பறவை மோதியது தெரிய வந்தது.
மேலும், திருச்சியில் இருந்து மீண்டும் விமானத்தை இயக்க இயலாத நிலை ஏற்பட்டதல். 139 பயணிகளும் கீழே இறக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
Category: மாநில செய்தி
0 comments