லெப்பைக்குடிக்காட்டை சார்ந்த ஹஜ் பயணி மக்காவில் வபாத்தானார்!
லெப்பைகுடிக்காடு ஜமாலிய நகர் மேற்கு மெயின் ரோடு மர்ஹூம் மொல்லா முஹம்மது உசேன் அவர்களின் மகன் ஹாஜி முஹம்மது காசிம் என்பவர் நேற்று (21/09/2014) ஞாயிற்றுக்கிழமை மக்காவில் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
இவர் கடந்த 15 ந்தேதி அன்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி மூலமாக இவரும் இவருடைய மனைவி ஹபிபுன்னிஷா ஆகியோர் சென்றனர்.
நேற்று காலை உணவு வாங்க லிப்டில் செல்லும் போது லிப்ட் பழுதடைந்து மூச்சு திணறி லிப்டிலேயே இறந்து விட்டார்.
இவர் இறந்த செய்தி நேற்று இரவே தெரிய வந்தது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
thanks - vkalathur.com
Category: இறப்புச் செய்திகள்
0 comments