சவூதி அரேபியாவில் உள்ள இந்தியர்கள் உடனே இந்தியன் தூதரகத்தில் விண்ணப்பித்து புதிய எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளவும்!!

வெளி நாட்டில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது பாஸ்போர்ட் கம்ப்யூட்டர் பதிவு செய்யப் பட்டதாக மாற்றிக் கொள்ளும் படி இந்தியன் தூதரகம் அறிவித்துள்ளது. புகைப்படம் ஒட்டப்பட்டும், எழுத்துக்கள் கையால் எழுதப் பட்டும் இருக்கும் பாஸ்போர்ட்களை கம்ப்யூட்டர் கிரகிக்க இயலாது என்பதால் அவைகளை உடனடியாக மாற்றிக் கொள்ளவும். 2001 ம் ஆண்டிலிருந்து எலக்ட்ரானிக் பாஸ்போர்ட்கள் வழங்கப் பட்டு வருகின்றன.
இன்னும் பழைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், 60 பக்க பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், Z-000001 லிருந்து Z-073000 வரை உள்ள நம்பர்களில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், எளிதில் இந்தியன் தூதரகத்தில் விண்ணப்பித்து பதிய எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் பெற்றுக் கொள்ளலாம்.
தகவல் :தி.ரஹ்மத்துல்லா
Category: வளைகுட செய்தி
0 comments