மனிதர்கள் நல்லறம் செய்யும் நாட்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள்!

மனிதர்களாகிய நாம் மறுமையில் அபரிமிதமான நன்மைகளை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக அருளாளன் அல்லாஹ் அதற்க்கான சிறந்த பருவகாலங்களை ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி சுழலச் செய்து கொண்டிருக்கின்றான்.
அதன் வரிசையில் ரமழானைத் தொடர்ந்து வரக்கூடிய பருவகாலமாகிய புனிதமான ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களையும் நாம் எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அந்த பத்து நாட்களதும் சிறப்புப் பற்றி பார்ப்போம்.
துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும், இந்த நாட்கள்தான் மனிதர்கள் நல்லறம் செய்யும் நாட்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்களாக இருக்கின்றன.
நபி (sal)அவர்கள் கூறினார்கள்:
ஆதத்துடைய சந்ததியினர்கள் நல் அமற்கள் செய்யும் நாட்களிலெல்லாம் அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய நாட்கள் துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அப்போது, அல்லாஹ்வின் திருதூதர் அவர்களே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான், என்றாலுல் யார் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும், உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தாரோ அவரைத்தவிர என்று நபி É அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)
இன்னும் இந்த பத்து தினங்களின் பெருமை பற்றி நாம் புரிந்து கொள்ளும் வகையில் அல்லாஹ் அவைகளின் மீது சத்;தியம் செய்திருப்பதுவே போதுமானதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் : அந்த பத்து இரவுகள் மீது ஆணையாக (அல்குர்ஆன்:89:2)
இங்கு பத்து இரவுகள் என்று கூறப்படுவது துல்-ஹஜ் மாதத்தின் முதல் பத்து இரவுகள்தான் என்றே அணைத்து அறிஞர்களும் முடிவு செய்துள்ளார்கள்.
இந்த நாட்கள் ஏனைய நாட்களைவிட சிறப்புற்று விளங்குவதற்கு காரணம் ஏனைய காலங்களில் ஒன்று சேர முடியாத இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளாகிய கலிமா (ஸஹாதத்) தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற இஸ்லாத்தினுடைய அணைத்து அடிப்படைக் கடமைகளும் இந்த நாட்களில் ஒன்று சேர்ந்து காணப்படுகின்றன. ஏனைய காலங்களில் ஒரு மனிதன் அணைத்து கடமைகளையும் செய்த போதிலும் ஹஜ் கடமையை அதற்குரிய காலமாகிய இந்த நாட்களைத் தவிர வேறு நாட்களில் செய்ய முடியாது. எனவே இந்த நாட்களில்தான் மேற்கூறப்பட்ட அணைத்து அமற்களையும் செய்ய முடிகின்றது. ஆதலால்தான் ஏனைய காலங்களைவிட இந்த நாட்கள் சிறப்பு பெறுகின்றது.
இந்த நாட்களில் செய்ய வேண்டிய நல் அமற்கள்.
ஹஜ்-உம்ரா செய்தல்
நபி (sal) அவர்கள் கூறினார்கள்: ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும், மேலும் ஏற்று க்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. நூல்: புகாரி,முஸ்லிம்
அதிகமதிகமாக நபிலான தொழுகைகளைத் தொழுதல்.
அதிகமதிகமாக நபிலான நோன்புகள் நோற்றல்,
குறிப்பாக அரபாவுடைய நாளன்று நோன்பு நோற்றல்.
நபி(sal) அவர்கள் கூறினார்கள்:
அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பவருக்கு அந்த நாளுக்கு முந்திய ஒரு வருடத்தின் பாவங்களையும், அதற்கு பின் வரக்கூடிய ஒரு வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன். (நூல்:முஸ்லிம்)
அதிகமதிகமாக தாண தர்மங்கள் செய்தல்.
அதிகமதிமாக உறவினர்களுக்கு உதவி உபகாரம் செய்தல்.
அதிகமாக குர்ஆனை ஓதுதல்.
பாவமன்னிப்பு தேடுதல்.
நன்மையை ஏவுதலும். தீமையை தடுத்தலும்
அதிகமதிகமாக அல்லாஹ்வை திக்ர் செய்தல் போன்ற நல் அமல்களில் ஈடுபடுதல் வேண்டும்.
நபி (sal) அவர்கள் கூறினார்கள:
துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே அன்றைய தினம் லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹ{ அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள். நூல்; : அஹ்மத்
அரஃபா தினத்தன்று ஹாஜிகள் நோன்பு நோற்க்கக்கூடாது, ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் ஏற்றமானது.
அத்துடன் துல் ஹஜ் பிறை ஒன்றிலிருந்து பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரை கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும்ää பள்ளிவாசல்ää வீடுää கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவதுää விஷேடமாக அரஃபா நாளின் ஸ{ப்ஹ{ தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரைக்கும் கூறுதல்;.
இப்னு உமர் Ê அபூஹ{ரைரா Ê ஆகிய இரு நபித் தோழர்களும் துல்ஹஜ் மாதம் ஆரம்ப பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்குச் செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள்ää இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள் (நூல்:புகாரி)
ஹஜ் பெருநாள் தொழுகை, இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுப்பது
கொம்புள்ள, கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (sal) அவர்கள் உழ்ஹிய்யா கொடுத்தார்கள், அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள். (நூல்: புகாரி)
தக்பீரின் முறை:
الله أكبر الله أكبر الله أكبرلااله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد
அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் லாஇலாஹ இல்லல்லாஹ{ அல்லாஹ{ அக்பர் அல்லாஹ{ அக்பர் வலில்லாஹில் ஹம்து
இதுவே அதிகமான ஹதீஸ்களில் வந்துள்ள தக்பீரின் முறையாகும். இது தவிர இன்று எமது வழக்கில் உள்ள தக்பீர் சொல்லும் முறை ஹதீஸில் இல்லா விட்டாலும் நபி É அவர்களின் துல் ஹஜ் மாதம் முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே அன்றைய தினம் லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹ{ அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் எனும் ஹதீஸின் அடிப்படையில் அதனைச் சொல்வதில் தவறேதும் கிடையாது எனக் கருதுகின்றேன். அப்படி யாராவது அது தவறு என்று கண்டு தகுந்த ஆதாரத்துடன் எடுத்துச் சொன்னால் இன்ஷா அல்லாஹ் நன்றியுடன் ஏற்றுக் கொண்டு அதனை மக்களுக்கும் தெளிவு படுத்துவேன்.
குறிப்பு:-
உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுக்க விரும்புபவர்கள் துல் ஹஜ் தலைப்பிறை தென்பட்ட திலிருந்து தனது குர்பானியை அறுத்துப் பலியிடும் வரை தனது உடம்பிலுள்ள எந்தவொரு முடியையும் அகற்றுதல் நகம் வெட்டுதல் கூடாது.
நபி (sal) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உழ்ஹிய்யா அதாவது குர்பான் கொடுக்க விரும்பினால் அவர் துல் ஹஜ் தலைப்பிறைக் கண்டதிலிருந்து உழ்கிய்யாவை நிறைவேற்றும் வரை தனது முடிகளையும் , நகங்களையும் அகற்றுவதனைத் தவிர்;த்துக் கொள்ளுதல் வேண்டும். (நூல்: முஸ்லிம் அறிவிப்பவர்: உம்மு ஸலமா )
முனாப் நுபார்தீன்
Category: முஸ்லிம்
0 comments