.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பிறப்பு முதல் ஒரு வருடம் வரை குழந்தைகளுக்கான உணவு முறைகள்!!

Unknown | 1:39 PM | 0 comments


 

இன்றைய காலகட்டத்தில் பெருப்பாலான இளம் தாய்மார்களின் கவலையெல்லாம் குழந்தையின் உணவு விசயத்தில் தான்.எந்தக் காலகட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவ சாலியான தாய்மார்களுக்கு கூட தடுமாற்றம் இருக்கிறது. இளம் தாய்மார்களின் கவலை போக்கவே இந்தக் கட்டுரை...

  குழந்தைகளுகு முதல் மற்றும் முக்கியமான உணவே தாய்ப்பால் தான். குழந்தை பிறந்த முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம்.ஆனால் பால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.

  முடிந்தவரை நள்ளிரவில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதைத் தவிர்த்துப் பாருங்கள்.காரணம் நாளடைவில் குழந்தையின் பற்கள் சொத்தை விழ இது காரணமாகலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம்.

நான்காவது மாதம்:

 குழந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிவிட்டால், பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீரை கொடுத்து பழக்கலாம்.

ஐந்தாவது மாதம்:

  குழந்தை பிறந்த ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம்.
   
  பழங்களில் ஆப்பிள்,வாழைப்பழம்,பழுத்த பப்பாளி ஆகியவை உங்களது முதல் விருப்பமாக இருப்பது நல்லது.

  மாலை வாழப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி அளிப்பதைத் தவிற்கலாம்.

  வைட்டமின் சி(C)) சத்து நிறைய அடங்கியவை-சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு,எலுமிச்சை ஆகியவை குழந்தைகளுகுத் தவறாமல் கொடுக்கலாம்.பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால்,குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆன பிறகு இது போன்ற பழங்களை கொடுத்து பார்க்கலாம்.

  பெரும்பான்மையான எல்லா பழங்களையும்,காய்கறிகளையும் மிக்ஸியிலரைத்து குழந்தைக்ளுக்குக் கூழ் போலாக்கி கொடுக்கலாம்.பருப்பு வகைகளையும் இப்படி கொடுக்கலாம்.

ஆறாவது மாதம்:

   ஆறாவது மாதம் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம்.இட்லியும் கொடுக்கத்தொடங்கலாம்.அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

  இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட,தெளிவான "ரசம்"போன்ற வற்றைத்தொட்டுக் கொள்ளலாம்.ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்கு பிடிபடுவது நல்லது.அப்போதுதான் வளர்ந்த பிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயாராகும்.

  சிறுகச்சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும்.குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும் போது உணவில் சிரு பகுதி புரதம்,செறித்த இறைச்சி,மீன்,முட்டை ,கோழிக் குஞ்சியின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம்.ஆனால் இவை நன்றாகப் பக்குவப் படுத்தப்பட்டதாகவும் இருத்தல் அவசியம்.

  ஏழாவது மாதம்:

    ஏழாவது மாதம் சப்போட்டா போன்ற பழங்களை கொடுக்கலாம். தோசை,பால் குறைவான சப்பாத்தி,தானிய சுண்டல்,மிக்ஸ்ட் ரைஸ்,கிச்சடி,உப்புமா,பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக வேண்டும்.

பத்தாவது மாதம்:

  குழந்தைகளுக்குப் பத்து மாதம் ஆனதும் சாதத்தையும் குழந்தைக்குப் பிசைந்து வெண் பொங்கல் போலாக்கி காய்கறித்துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

 குழந்தைகள் காய்கறிகளைக் துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம்.தினமும் ஒரு முறை இப்படி சாப்பிடலாம்.நடுவே வெரைட்டிக்கு ரொட்டித்துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவிக் கொடுக்கலாம்.

  காய்ந்த திராட்சை,பேரிச்சம் பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது.ஆனால் இவற்றை சாப்பிட்ட பிறகு மறக்காமல் பற்களை சுத்தம் செய்து விடுங்கள்.

 எப்போதுமே ஒரே நாளில் இரண்டு வித புதிய உணவுகளைக் குழந்தைக்குக் அறிமுகப்படுத்த வேண்டாம்.சில நாட்கள் இடை வெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள்.அப்போதுதான் குழந்தக்கு வயிற்றுப்போக்கோ அல்லது வேறு எதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.
  


 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1