.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வாலிகண்டபுரத்தில் டேங்கர் லாரி மோதி முதியவர் பரிதாப பலி!

Unknown | 10:51 PM | 0 comments




பெரம்பலூர்,செப்.30:
பெரம்பலூர் அருகே டேங்கர்லாரி மோதி முதியவர் பலியானார்.
பெரம்பலூர் அருகே உள்ள பெருமத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(65), இவர் நேற்று தனது டூவீலரில் பெரம்பலூருக்கு வந்து கொண்டிருந்தார். வாலிகண்டபுரம் ஆர்.எஸ்.மஹால் அருகே வந்த போது டூவீலரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த டேங்கர் லாரி துரைசாமி மீது மோதியது.
இதில் படுகாயமடைந்தவரை மங்கலமேடு போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் துரைசாமி இறந்தார்.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த பெருமத்தூர் அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்த இளவரசன்(42) அளித்த புகாரின்பேரில் மங்கலமேடு இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் வழக்கு பதிந்து திண்டிவனத்தை சேர்ந்த கண்ணன்(46) என்பவரை கைது செய்து விசாரிக்கிறார்.


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1