திருச்சியில் வரும் 6 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
திருச்சி,செப்.3:
6ம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடை பெற உள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குனர் தமிழ்செல்வி அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வேலை வாய்ப்புகளில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு அரசால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்களுக்கு விதிகளுக்குட்பட்டு பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. பதிவுதாரர்களுக்கு அரசு பணிவாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்காமல் தனியார் வேலை வாய்ப்பிற்கு பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.வரும் 6ம் தேதி அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடை பெற உள்ளது. யுனிக் சாப்ட்வேர் டெக்னாலஜி யில் பணிபுரிவதற்கு கல்வித்தகுதி பிஇ (சிஎஸ்), பிடெக் (ஐடி), எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்எஸ்ஐடி, பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), பிசிஏ ஆகும். வயது வரம்பு ஏதுமில்லை. சம்பளம் அனுபவத்தை பொறுத்து மாதம் ரூ.8ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படும். அனுபவம் இல்லாதவர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே இப்பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் வரும் 6ம் தேதி அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மன்னார்புரம், திருச்சி&20 என்ற முகவரிக்கு நேர்முக தேர்விற்கு அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எனவே தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறா மல் பயன்படுத்தி 6ம் தேதி நடை பெறும் நேர்காணலுக்கு காலை 10 மணிக்கு அவர்களது சொந்த செலவில் ஆஜராகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Category: வேலைவாய்ப்பு
0 comments