சவுதி அரேபியாவில் சாராய பேக்டரி நடத்திய 3 இந்தியர்கள் பொலிசாரின் பிடியில்! (விடியோ இணைப்பு)
சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் கள்ளச்சாராயாம் காய்ச்சிய 3 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக சவூதி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, ஹெய்ல் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், அந்த வீட்டினுள் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிற்சாலை நடந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்ததுள்ளனர் .
குறித்த வீட்டினுள் பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிச்சாராயம் மற்றும் போத்தல்களில் அடைத்து விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராயம்,அவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த இயந்திரங்கள் மற்றும் ஏராளமான பணத்தையும் கைப்பற்றிய சவூதி போலீசார், இந்த தொழிற்சாலையை நடத்திவந்த 3 இந்தியர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Category: வளைகுட செய்தி
0 comments