சென்னை விமானநிலையத்தில் வெள்ளி விழா விபத்து ! 25வது முறையாக கண்ணாடி கதவு நொறுங்கி விழுந்தது!
சென்னை, செப்.20:
நவீன முறையில் புதுப்பிக்கப் பட்டு செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்தில் நேற்று 25வது முறை கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது.
சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் ரூ.2015 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறப்பு விழா நடந்தது. அதன்பின் கடந்த ஆண்டு மே மாதத் தில் இருந்து தொடர்ச்சியாக சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்களில் நவீனமாக புதுப் பிக்கப்பட்ட மேற்கூரைகள், கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள் தொடர்ச்சியாக 24 முறை உடைந்து விழுந்து விபத்துக்கள் நடந்தன.
நேற்று காலை 11 மணிக்கு 25வது முறையாக விபத்து ஏற்பட்டது.
உள்நாட்டு முனையத் தில் பயணிகள் வருகை பகுதியில் 7அடி உயரம் 5அடி அகலத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடை ந்து விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக அப்போது விமானம் வராத தால், பயணிகள் அந்த வழியாக வரவில்லை. அதே போல், விமான நிலைய ஊழியர்களும் அங்கு இல்லை. இதனால், அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது.
25வது முறையாக கண்ணாடி கதவு உடைந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 25வது முறையாக உடைந்து விழுந்து வெள்ளி விழா கண்டுள்ள இந்த சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடமும், ஊழியர்களிடமும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, எந்த பதிலும் அளிக்க மறுத்துவிட்டனர்.
Category: மாநில செய்தி
0 comments