.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

10ம் வகுப்பு / ஐடிஐ படித்தவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 1085 காலியிடங்கள்!

Unknown | 8:54 PM | 0 comments

மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இந்தப் படை பிரிவு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 5 பிரிவுகளைக் கொண்டதாகும். தெற்கு பிரிவானது தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது.

பணியின் விவரம்:

கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன்.

மொத்த காலியிடங்கள்: 

1085. இவற்றில் 100 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

சம்பளம்: 
ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000.

பணியிடங்கள்:

பார்பர் - 132, பூட் மேக்கர் - 31, சமையலர் - 401, கார்பென்டர் - 21, எலக்ட்ரீசியன் - 2, மோட்டார் பம்ப் அட்டென்டென்ட் - 2, பெயின்டர் - 86, ஸ்வீப்பர் - 191, வாஷர்மேன் - 173, வாட்டர் கேரியர் - 29.

வயது வரம்பு:

1.8.2014 தேதியின்படி 18 லிருந்து 23க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்களின் சர்வீஸ்கேற்றபடியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

பார்பர், பூட்மேக்கர், குக், கார்பென்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் பம்ப் அட்டென்டென்ட், பெயின்டர், வாஷர்மேன் ஆகிய பணிப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஸ்வீப்பர் மற்றும் வாட்டர் கேரியர் ஆகிய பணிப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானதாகும்.

உடல் தகுதிகள்:

பொது: எஸ்சி/ ஒபிசியினருக்கான உயரம் : 170 செ.மீ., மார்பளவு: 80 - 85 செ.மீ., எஸ்டி பிரிவினருக்கான உயரம்: 162.5 செ.மீ., மார்பளவு: 76 - 81 செ.மீ., எடை: உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடை.

கண் பார்வை திறன்: 6/6, 6/9. சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவுகள் அளவிடுதல், உடல் திறன் தேர்வு, டிரேடு தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.50. இதை 'Assistant Commandant/DDO CISF, SZ HQR, Chennai' என்ற பெயரில் சென்னையில் செலுத்தத்தக்க வகையில் போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. 

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.cisf.gov.in அல்லதுwww.cisfrecruitment.org என்ற இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

DIG/CISF South Zone Hqrs,
DBlock, Rajaji Bhavan, 
Beasant Nagar, 
Chennai 600090.


விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.9.2014.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1