போலீஸ் நிலையத்திலேயே நகை திருடிய போலீஸ்காரர் கைது! சிசிடிவி கேமரா காட்டி கொடுத்தது!
பொள்ளாச்சி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன் (31). கோவை கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் 2ம் நிலை போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பெரும்பாலும் இரவு நேர பணியே ஒதுக்கப்பட்டு வந்தது. கடந்த 27ம் தேதியின்போதும் இவருக்கு இரவு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போது, பீரோவில் இருந்த மூன்றரை பவுன் நகையை திருடி உள்ளார். மறுநாள் காலை எஸ்.ஐ. பிரபாகரன் என்பவர் நகையை கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தார். அதில், நகையை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ரவியிடமும், டிஎஸ்பி. முத்துராஜிடமும் எஸ்.ஐ. பிரபாகரன் தெரிவித்துள் ளார். இதனால், ஸ்டேஷனில் இருந்த சிசிடிவி (கண்காணிப்பு) கேமராவில் பதிவானவற்றை, இன்ஸ்பெக்டர் ரவி நேற்று முன்தினம் சோதனை செய்தார். அதில், போலீஸ்காரர் பாண்டியன் நகை திருடியது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி பாண்டியனிடம் உரிய ஆதாரத்துடன் விசாரிக்கும்போது, நகையை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து போலீஸ்காரர் பாண்டியன் மீது, கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் நகை திருட்டு வழக்குபதிவு செய்து, மூன்றரை பவுன் நகையும் பறிமுதல் செய்தனர். திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் பாண்டியன் பொள்ளாச்சி ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மாஜிஸ்திரேட் ஹரிஹரன் உத்தரவின்பேரில் உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மற்றொரு ஏட்டு கைது: குமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரி தெலுங்கு செட்டித்தெருவை சேர்ந்தவர் கோபால் (45). கீரிப்பாறை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியில் இருந்தபோது இவர் எந்தவித தகவலும் இல்லாமல் மாயம் ஆனார். இவர் மீது 2009ல் அடிதடி வழக்கு ஒன்று பதிவானது. இதில், நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் இவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வடசேரி இன்ஸ்பெக்டர் பெரியசாமி ரோந்து பணியின்போது கோபால் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Category: மாநில செய்தி
0 comments