.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சவுதி அரேபியா : பணியிடம் / அனுசரணையாளர் மாற்றம் தொடர்பான புதிய சட்டம்!

Unknown | 9:37 PM | 0 comments



சவுதி: பணியிடம் / அனுசரணையாளர் மாற்றம் தொடர்பான புதிய சட்டம்

தாம் பணிபுரியும் இடம் அல்லது அனுசரணையாளரை மாற்ற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மேலதிக உரிமைகளை வழங்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது சவுதி உள்துறை அமைச்சு.

இதனடிப்படையில் தனது பணியிடத்தை மாற்றுவதற்காக விண்ணப்பிப்போர் தொடர்பாக அனுசரணையாளர் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க விரும்பினால் ஐந்து நாட்களுக்குள் அதற்கான வாய்ப்பளிக்கப்படும் எனவும் அந்த ஐந்து நாட்களுக்குள் ஆட்சேபனைகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அனுசரணையாளர் மாற்றத்திற்கான செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் ஊடாகவும் தமக்கான வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளவும் அனுமதியும் வழங்கப்படுகிறது எனவும் கைவிடப்பட்ட நிலையில் சவுதி அரேபியாவுக்குள் இருக்கும் வெளிநாட்டவரும் தொழில்துறை அமைச்சினூடாக (http://wafid.com.sa/) பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Thanks :(SONAKAR DOT COM)

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1