உங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் ‘ஸ்மார்ட் போன்’கள்!
லண்டன்: உங்களை அறியாமலேயே அண்ட்ரொய்ட் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரின் விவரம் கூகுளால் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இதனால் தனி நபர்களின் ரகசியம் மீறப்படுகிறது.
தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு மனிதனுக்கு தனிமை என்பதே தவிர்க்கப்பட்ட பொருளாகிவிட்டது. நகரங்களில் கேட்கவே வேண்டாம். குற்றங்களை தடுக்க என்று தடுக்கிவிழும் இடங்களில் எல்லாம் சிசிடிவி காமிராக்களை பொருத்தி வைத்துள்ளனர்.
பெண்கள் குனிந்து நிமிருவது வரை, ஆண்கள் சாரணை அவிழ்த்து உடுக்கும்வரைக்கும் அனைத்தையும் இந்த கமராக்கள் கண்களால் சிறை பிடித்து மற்றொருவருக்கு காண்பித்துக்கொண்டுதான் உள்ளன.
இதில் புது வரவுதான் அண்ரொய்ட் போன்கள். இத்தகைய போன்கள் வைத்துள்ளோர் மற்றும் கூகுள் நவ் வசதியை அக்டிவேட் செய்து
வைத்திருப்போர் ரகசியங்கள், தனிமை அனைத்தும் அம்பலமாகிவிடுவதாக குமுறுகின்றனர் விவரம் அறிந்தோர்.
ஸ்மார்ட் போன் வைத்துள்ளோர்கள் அனைவருமே கட்டாயம், கூகுள் அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்திருப்பார்கள். இதை வைத்து குறிப்பிட்ட நபரின் நடமாட்டத்தை ஸ்டோர் செய்து வைக்கிறது கூகுள்.
கூகுள் மெப் செட்டிங்ஸ் பகுதியிலுள்ள location history பகுதியில் இவை அனைத்தும் சேமிக்கப்பட்டுவிடுகிறது. மாதக்கணக்கான தகவல்களும் இதில் உள்ளன. போனை எடுத்துக் கொண்டு அந்த நபர் எந்தெந்த பகுதிக்கு சென்றாரோ அந்த பகுதிகளில் புள்ளிகள் காணப்படுகின்றன. அவர் பயணித்த சாலைகூட புள்ளிகளால் இணைக்கப்பட்டு ஒரு நொடி கூட விடாமல் காண்பிக்கப்படுகிறது.
இதில் ஒரு வசதி என்னவென்றால் இந்த சேவை பிடிக்காவிட்டால் அதை நாம் ஓஃப் செய்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் பெரும்பாலானோர் இதுகுறித்து கவனிக்காமல் விட்டுவிடுவதால் நமது நடமாட்டம் குறித்த தகவல்களை கூகுள் சேமித்து வைக்க உதவிவிடுகிறோம்.
எமது தனிப்பட்ட விவகாரங்களை எதற்கு இன்னுமொருவருக்கு தெரியப்படுத்த வேண்டும். எனவே, அவதானமாக இருப்போம்.
Category: துனுக்குகள்


0 comments