.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூர் மாவட்ட மாணவ -மாணவிகளுக்கு கடைசி வாய்ப்பு! வரும் ஆக. 23-ல் மூன்றாம் கட்ட கல்விக் கடன் முகாம்!

Unknown | 8:48 PM | 0 comments

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆக. 23-ம் தேதி 3-ம் கட்ட கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்ட மாணவ, மாணவிகளின் உயர்கல்வி பொருளாதார காரணங்களால் தடைபடக் கூடாது என்பதற்காக 2 கட்டங்களாக கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களில் பங்கேற்காத மாணவ, மாணவிகளுக்கு ஆக. 23-ம் தேதி 3-ம் கட்ட கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் கலந்துகொள்ளும் விண்ணப்பதாரர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், தொழிற் மற்றும் உயர்கல்வி பயிலுபவராகவும் இருக்க வேண்டும்.

பி.எட். பயிலும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம். வங்கியாளர்களுக்கு தேவையான உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால் உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாமில் மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனுக்குடன் மாவட்ட மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் கணினி சான்றிதழ்களாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், 10, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி முதல்வரின் சேர்க்கைக்கான சான்றிதழ்கள், பெற்றோரின் ஊதியச் சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சேர்க்கை ஆணை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், புதுவாழ்வுத் திட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், www.perambalur.nic.in, www.perambalur.tn.nic.in ஆகிய இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Category: ,

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1