.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தமிழ் நாட்டின் கேவலமான நிலை!

Unknown | 2:37 PM | 0 comments



மாநிலத்தின் கேவலமான நிலை!

இந்தியாவிலே மதுபான விற்பனையில் தமிழகம்தான் வரலாறு காணாத வருமானம் ஈட்டி இதர மாநிலங்களுக்கு முன்னோடி(!) மாநிலமாக உருவெடுத்துள்ளது.

மக்களுக்கு கல்வியை வழங்க வேண்டிய அரசு சாராய வியாபாரத்தையும், கல்வியை தனியாருக்கும் விற்றதால் ஏற்பட்ட விளைவுகள்.


கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மதுபான உற்பத்தி விவரம்: 2001-02 ஆம் ஆண்டில் 13.32 கோடி லிட்டர் மதுவும் 5.06 கோடி லிட்டர் பீரும் உற்பத்தி செய்யப்பட்டது.

2002-03 ஆம் ஆண்டில் இது 11.62 கோடி லிட்டர் மற்றும் 4.32 கோடி லிட்டர் (பீர்) என குறைந்தது. ஆனால் 2003-04 ஆம் ஆண்டு முதல் மது உற்பத்தியில் அதிரடி ஏறுமுகம்தான். அந்த ஆண்டு 14.04 கோடி லிட்டர் மதுவும் 5.96 லிட்டர் பீரும் உற்பத்தியானது.

2005-06ஆம் ஆண்டில் இது அதிரடியாக 19.86 கோடி லிட்டராகவும் 10.62 லிட்டராகவும் அதிகரித்தது. 2006ஆம் ஆண்டு முதல் 2008-09 ஆம் ஆண்டு வரை மது உற்பத்தி ஆண்டுக்கு 4 கோடி லிட்டர் அதிகரித்தது. பீர் உற்பத்தியானது 2 கோடி முதல் 3 கோடி லிட்டர் வரை அதிகரித்தது.

2008-09ம் ஆண்டு மது உற்பத்தி 31.08 கோடி லிட்டராக இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு 2009-10-ல் இது 36.66 கோடி லிட்டராக எகிறியது. அதன் பின்னர் 2010-11ஆம் ஆண்டில் உச்ச அளவாக 42.72 கோடி லிட்டர் மது உற்பத்தியானது. பீர் உற்பத்தியோ 19.03 கோடி லிட்டரானது.

10 ஆண்டுகால வருவாய் விவரம்: -2003-04 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ3,639 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது. -2007-08 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் அதிகரித்து இருந்தது.

2007-08ஆம் ஆண்டு மதுபான விற்பனை மூலமான அரசுக்கான வருவாய் ரூ 8,821 கோடியாக இருந்தது. 2010-11ஆம் ஆண்டு இந்த வருவாயானது ரூ14, 965 கோடியை எட்டியது. -2012-13 ஆம் ஆண்டிலோ உச்சகட்டமான ஆண்டுக்கு ரூ21,680 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.

* இதனால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளன. எத்தனை கொலைகள், கற்பழிப்புக்கள் நடந்துள்ளன. குடியால் நடந்த விபத்துக்கள் மட்டும் 42% சதவீதம் என்று ஒரு சர்வே கூறுகிறது. இவைகள் அத்தனையும் கணக்கெடுத்து வெளியிட்டால் மாநிலத்தின் மானம் காற்றில் பறக்கும்.



Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1