பெரம்பலூரில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் மேகநாதன்(வயது 40). நேற்று காலை இவர் குடிபோதையில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று, அங்கிருந்த போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து துணை சூப்பிரண்டு அலுவலக போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து, பணியின் போது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மேகநாதனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்த்ரா உத்தரவிட்டார்.
Category: மாவட்ட செய்தி

0 comments