.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களுக்கு புதிதாக கல்வி கட்டணம்: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி

Unknown | 8:34 PM | 0 comments




சென்னை, ஆக.19-

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் பல பள்ளிகள் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக அரசுக்கு புகார் வந்தன. இதைத்தொடர்ந்து கட்டணத்தை ஒழுங்கு படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படுகிறது.

தற்போது இந்த கமிட்டி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் செயல்பட்டு வருகிறது.

இந்த கமிட்டி ஏற்கனவே 10 ஆயிரம் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அறிவித்தது. சில பள்ளிகள் தங்கள் பள்ளியில் வசூலிக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போதாது என்று புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த பள்ளிகளின் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்து பரிசோதனை நடத்தப்பட்டு மறு கட்டணம் நிர்ணயித்து உள்ளது.

சென்னை பெரம்பூரில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளிக்கூடம் அரசு விதித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தை மாணவர்களிடம் வசூலித்ததாக நீதிபதி சிங்காரவேலு கமிட்டியிடம் புகார் செய்யப்பட்டது. அந்த பள்ளியில் ரூ.1 கோடியே 62 லட்சத்து 20ஆயிரத்து 380-க்கு கட்டணம் வசூல் செய்ததாக முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் நீதிபதி சிங்காரவேலு கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பித்தார். இதைத்தொடர்ந்து அதிகமாக வாங்கிய கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்கும்படி கமிட்டி நேற்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த செயலுக்கு லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றத்திற்கு எதிரான அகில இந்திய நுகர்வோர் மற்றும் மனித செயல்பாடு அமைப்பின் தலைவர் கோ.தேவராஜன் நன்றி தெரிவிக்க சென்றார். இது குறித்து நீதிபதி சிங்காரவேலு தெரிவிக்கையில் கமிட்டி தன் கடமையை செய்துள்ளது. இதற்காக நோட்டீசு அச்சடிப்பது கண்டிக்கத்தக்கது. நன்றி தெரிவிக்கவேண்டாம் என்றார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 பள்ளிகளில் கூடுதல் கட்டணம் மற்றும் நன்கொடை வசூலிக்கப்படுவதாக கூறி பள்ளி நிர்வாகம் கூறும் பதிலை அவர்களுக்கு தெரியாமல் ஒருவர் ரகசியமாக கேமரா போனில் வீடியோ- ஆடியோ எடுத்து அதை சி.டி.யாக மாற்றி நீதிபதி சிங்காரவேலு கமிட்டியில் ஒப்படைத்துள்ளார். அது போலி என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறுகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு இந்த கமிட்டி 2012-2013, 2013-2014, 2014-2015 ஆகிய 3 கல்வி வருடங்களுக்கு மாணவ-மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவித்தது. அந்த கட்டணம் நிர்ணயித்த காலம் வருகிற மார்ச் மாதத்துடன் முடிந்துவிடும். எனவே 2015-2016, 2016-2017, 2017-2018 ஆகிய 3 வருடங்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யவேண்டி உள்ளது.

அந்த பணியை நீதிபதி சிங்கார வேலு தலைமையிலான கமிட்டி செய்ய உள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1