.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

லூஸி - அமெரிக்க பெண்மணியின் உணர்வுபூர்வமான மனமாற்றம்! (விடியோ இணைப்பு!)

Unknown | 3:04 AM | 0 comments




லூஸி என்ற இந்த அமெரிக்க பெண்மணி இஸ்லாத்தை ஏற்கிறார். உறுதி மொழி எடுக்கும் போது தன்னையறியாமல் அழுகிறார். இறை வேதத்துக்கும் அதன் உண்மைத் தன்மைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவ்வாறு அவர்கள் முதன் முதலாக உறுதி மொழி எடுக்கும் போது உடலில் இனம் புரியாத ஒரு உலுக்கல் எடுக்கிறதாக சொல்கின்றனர். இதனை பலரும் சொல்லக் கேட்டுள்ளேன். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து விட்டதனால் அந்த உணர்வை என்னால் உணர முடியாது. ஆனால் அந்த பெண்ணின் உணர்வை என்னால் உணர முடிகிறது.

உறுதி மொழியை ஒவ்வொரு படியாக சொல்லிக் கொடுக்கும் சகோதரர் யூசுபை நான் ரியாத்தில் வைத்து சந்தித்துள்ளேன். ஹாஸ்யமாக பேசக் கூடியவர். கை குலுக்கி 15 நிமிடங்கள் இவரிடம் பேசிக் கொண்டும் இருந்தோம். எதையுமே ஹாஸ்யமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர். எந்த நேரமும் சிரித்த முகத்துடனேயே இருப்பார். ஒரு அழைப்பாளனுக்கு அவசியம் இருக்க வேண்டிய பண்பு இது. இவர் அமெரிக்க தேவாலயத்தில் ஃபாதராக பணிபுரிந்தவர். குர்ஆனை விளங்கி சில ஆண்டுகளுக்கு முன்புதான் இஸ்லாத்தை ஏற்றார். இன்று இவர் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

சகோதரியின் காணொளியைக் காண.....



Thanks by சுவனப் பிரியன்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1