.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் மரபு இந்த ஆண்டு நிறுத்தம்!

Unknown | 2:36 PM | 0 comments


எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, சுதந்திர தினத்தில் ஜம்மு மாவட்ட சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கும் மரபு இந்த ஆண்டு பின்பற்றப்படவில்லை.


இருப்பினும், அந்த மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மட்டும் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அதேபோல், பஞ்சாப் மாநிலம் அட்டாரி/வாகா எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவின் பிரபல இனிப்புகளும், பழங்களும் வழங்கப்பட்டன.


அத்துமீறல் இல்லை: இதனிடையே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுதந்திர தினமான வெள்ளிக்கிழமையன்று பாகிஸ்தான் தரப்பிலிருந்து அத்துமீறிய தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை.


“இந்திய வீரர்கள் சார்பில் ஏற்கெனவே பலமான பதில் தாக்குதல் நடத்தப்பட்டதால், சுதந்திர தினத்தையொட்டி அத்துமீறிய தாக்குதல் ஏதும் நிகழவில்லை’ என்று எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1