.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

இந்தியாவின் முன்னணி பிராண்ட் தேயிலைகளில் தடை செய்யப்பட்ட மற்றும் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகள்! - சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரிக்கை!

Unknown | 10:21 PM | 0 comments

உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

அரசு சாரா நிறுவனமான ‘கிரீன்பீஸ் இந்தியா’ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்த தகவலை அளித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் WHO அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் அபாயகரமான அளவில், இந்தியாவில் விற்கப்படும் முன்னணி நிறுவனங்களின் தேயிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்து உள்ளதாக கிரீன் பீஸ் இந்தியா கூறியுள்ளது. மேலும் தேயிலை செடிகளில் அடிக்க அனுமதிக்கப்படாத பூச்சிக்கொல்லி மருந்துகளும் இதில் காணப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

கிரீன் பீஸ் இந்தியா கடந்த 2013 ஜுன் மாதம் முதல் 2014 மே மாதம் வரை இந்திய சந்தையில் அதிகமான விற்கப்படும் 49 பிராண்டுகளின் தேயிலை மாதிரிகளும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இந்தியாவின் 11 முன்னணி நிறுவனங்களின் தேயிலை மாதிரிகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த தேயிலைகளில் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தேயிலைகளும் அடக்கம்.

இந்நிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஹிந்துஸ்தான், டாடா, டிவிங்ஸ், கோலடன் டிப்ஸ், கிர்னார் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான நிறுவனங்களின் தேயிலை மாதிரிகளில் மிக அதிக அபாயகரமான மற்றும் மிதமான அளவுகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சு காணப்பட்டது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தேயிலை மாதிரிகளில் ஒருகுறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சு மட்டும் அல்லாது பலதரப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் நச்சுகள் காணப்பட்டுள்ளன. மேலும் கடந்த 1989 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் பயிர்களுக்கு அடிக்க தடை செய்யப்பட்ட DDT என்ற பூச்சிக்கொல்லி மருந்து, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரிகளில் 67 சதவீத மாதிரிகளில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது என கிரீன்பீஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தவிர மனிதர்கள் மற்றும் பறவைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மோனோக்ரோடோபாஸ் (Monocrotophos) என்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் இத்தேயிலை மாதிரிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

பீகாரில் கடந்த ஆண்டு, பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 23 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை அந்த அறிக்கையில் நினைவூட்டியுள்ள கிரீன்பீஸ் இந்தியா, அந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவில் மேற்கூறிய மோனோக்ரோடோபாஸ் பூச்சிமருந்து கலந்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும், இதனைத் தொடர்ந்து வளரும் நாடுகள் இந்த மோனோக்ரோடோபாஸ் பூச்சிமருந்தை பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் தேயிலை உற்பத்தி துறை பூச்சிக்கொல்லி மருந்து பொறியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அதிலிருந்து விடுபட்டு இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையிலான விவசாய முறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், தேயிலை நிறுவனங்கள் இந்த மாற்றத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ள கிரீன்பீஸ், ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள முன்னணி தேயிலை நிறுவனங்களுடன் தங்களது அறிக்கையின் நகலை பகிர்ந்ந்து கொண்டதாகவும், இது தொடர்பாக அவர்களுடன் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் கிரீன்பீஸ் இந்தியாவின் இந்த ஆய்வறிக்கையை ஏற்க, மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 'இந்திய தேயிலை வாரியம்' மறுத்துள்ளது.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1