பெரம்பலூர் அருகே குண்டும்– குழியுமான சாலை உடனடியாக சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்ப்பு!
பெரம்பலூர் அருகே குண்டும்–குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுற்றுச்சாலை
பெரம்பலூர் நகருக்கு சுற்றுச்சாலை 2 கட்டமாக அமைக்கப் பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக திருச்சி– சென்னை 4 வழிச்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் இருந்து ஆத்தூர் சாலையை இணைக்கும் வகையிலும், இரண்டாம் கட்டமாக ஆத்தூர் சாலையில் இருந்து துறையூர் சாலையை இணைக்கும் வகையிலும் சுற்றுச்சாலை அமைக்கப் பட்டுள்ளது.
முதல் கட்ட சுற்றுச்சாலை பணிகள் கடந்த ஆட்சியின்போதும், 2–வது கட்ட சுற்றுச்சாலை அ.தி.மு.க. ஆட்சியின்போது அமைக்கப் பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில்தற்போதைய அரசால் பொதுமக்கள் பயன் பாட்டிற்காக சுற்றுச் சாலை திறந்து விடப்பட்டுள்ளது.
குண்டும்–குழியுமான சாலை
இதுதவிர எளம்பலூர் ஊராட்சிக்கான தனி புறவழிச் சாலை புதிதாக அமைக்கப் பட்டு, இந்த சுற்றுச்சாலையில் இணைகிறது. இந்த புதிய சாலை இன்னும் திறந்து விடப்படவில்லை. புதிதாக அமைக்கப்பட்டுள்ள எளம் பலூர்புறவழிச்சாலை, சுற்றுச் சாலையுடன் இணையும் இடத்தில் ஏற்கனவே உள்ள எளம்பலூர்– இந்திராநகர் பஸ் நிறுத்தம் வரையிலான சாலை குறுக்கிடுகிறது.
இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளாக குண்டும்– குழியுமாக காட்சி யளிக்கிறது. 10 மீட்டருக்கு ஒரு பள்ளம் என அரை கிலோ மீட்டர் தூரம் வரையும் சாலைகளில் அரளைக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடப்பதால், போக்கு வரத்துக்கு பயனற்ற வகையில் அச்சாலை உள்ளது.
நூற்றுக்கணக்கான வாகனங்கள்...
சென்னை, விழுப்புரம், வி.களத்தூர் ,திட்டக்குடி, தொழுதூர், பெண்ணாடம் மார்க்கத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங் கள் இந்த சாலை வழியாக வந்து சுற்றுச் சாலையை கடந்து ஆத்தூர் சாலை அல்லது துறையூர் சாலையை அடைகின்றன.
மேலும் எளம்பலூரில் சிட்கோ தொழிற்பேட்டையும் வேகமாக வளர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் என்ஜினீயரிங் கல்லூரிகள், தொழில் நுட்ப கல்லூரி ஆகியவை உள்ளன. பெரம் பலூர், எளம்பலூர், வடக்கு மாதவி, எசனை, வேப்பந் தட்டை பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளும், கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களும் தினந்தோறும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோரும், இலகுரக, கனரக வாகனங்களில் செல் வோரும் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைத்து அகலப்படுத்தி, புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று மாணவ, மாணவிகள், வாகன ஓட்டு னர்கள் உள்ளிட்ட பொது மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
Category: மாவட்ட செய்தி


0 comments