கேரளத்தில் 2015-லிருந்து பூரண மதுவிலக்கு : மாநில முதல்வர் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். கேரளாவில் லைசென்ஸ் பெற்ற மதுக்கடை பார்கள் மற்றும் மதுபான விடுதிகள் உள்ளன. இதுதவிர 3 நட்சத்திர, 4 நட்சத்திர, மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கும் பார் லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திட அம்மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. பூரண மதுவிலக்கு தொடர்பாக விவாதிக்க கூட்டணி கட்சிகளின் உயர்மட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய மது கொள்கையை அமல்படுத்திட முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படிமுதல்கட்டமாக 3 நட்சத்திர மற்றும் 4 நட்சத்திர ஹோட்டல்களுக்கு வழங்கப்பட்ட பார் லைசென்ஸ்கள் ரத்து செய்யப்படும், இதன் மூலம் மாநிலத்தில் 730 பார்கள் மூடப்படும். 5 நட்சத்திர ஹோட்டல்களுக்கு மட்டும் உரிமம் வழங்கிடவு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் 312 பார்களுக்கான லைசென்ஸ் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் ஆண்டு முடிவடைகிறது. இவற்றின் உரிமங்களை மேலும் புதுப்பிக்க தடை விதிக்கவும், படிப்படியாக அடுத்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மது பார்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு சுயவேலைவாய்ப்பு மூலம் மாற்றுஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வரான உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

Category: மாநில செய்தி

0 comments