.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபை மருத்துவமனையில் பனிரெண்டு மாதமாக கோமாவில் இருந்து வரும் தமிழக தொழிலாளி தமிழகம் புறப்பாடு : ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு!

Unknown | 3:08 PM | 0 comments

துபை மருத்துவமனையில் பனிரெண்டு மாதமாக இருந்து வரும் தமிழக தொழிலாளி : துபாய் அரசு – இந்திய கன்சுலேட் – துபை ஈமான் அமைப்பு – இந்திய மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் உதவியுடன் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க இன்று புறப்படுகிறார் !
துபை : துபை மருத்துவமனையில் கடந்த 2013 ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் ( வயது 41 ) தற்பொழுது கோமோ நிலையில் இருந்து வருகிறார்.
இவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்து விட்டார்.
மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமோ நிலையில் இருந்து திரும்பவேயில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் கூட்டிச் செல்ல அவரது கம்பெனிக்கு அறிவுறுத்தியுள்ளது.
கம்பெனி துபையில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகினர்.
இவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்து சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.
எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் இவரை அனுமதிக்க உதவிட துபை ஈமான் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலக கடிதம் எண் E1 / 3703 /2014 dt. 02.05.2014 துபை இந்திய துணைத்தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இப்பணிகளுக்கு மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தின் கமிஷனர் ஆனந்த் ( 044-28515288 ), துணை ரிஜிஸ்டர் மோகன்ராஜ் ( 044-28525648 ) மற்றும் அவரது அலுவலக நலத்துறை அலுவலர் உள்ளிட்டோர் மனிதாபிமான அடிப்படையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க அனுமதி பெற்றுள்ளனர். நடராஜனின் குடும்பத்தினர் பாண்டிச்சேரியில் இருப்பதால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர்.
இதனையடுத்து நடராஜன் இன்று ( 21 ஆகஸ்ட் 2014 ) இரவு ஏர் இந்தியா AI 906 விமானத்தில் ஸ்ட்ரச்சர் மூலம் துபையில் 2330 மணிக்கு புறப்பட்டு காலை 05.00 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடையும்.

அதன் பின்னர் தமிழக அரசின் 108 அவசர ஊர்தி சேவை மூலம் பாண்டிச்சேரிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர்.

இவருடன் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், பவர் குரூப் அலுவலர் கோவை தேவராஜ், துபை மருத்துவமனையின் செவிலியர் உள்ளிட்டோர் வருகின்றனர்.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனிக்கு காலை 10 மணியளவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.


மேலதிக விபரங்களுக்கு :
திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா, துணைப் பொதுச்செயலாளர், ஈமான் 00971 50 467 43 99 / 0091 8012 459 459
முதுவை ஹிதாயத் 00971 50 51 96 433 / 0091 965 9644 786
மின்னஞ்சல் : muduvaihidayath@gmail.com / info@imandubai.com
உள்ளிட்ட மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
நடராஜன் மனைவி தொடர்பு முகவரி :


N.EAZHILARASI,

C/O, R .ANBAJAGAN,

NO:02,FIRST FLOOR

MUTHAALAMMAN KOVIL STREET,PAVAZHA NAGAR,

PONDICHERRY 605005.


Mrs.Ezhilarasi Natarajan: 00918940153338

Natarajan son: 00919003861341

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1