வி .களத்தூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை!
பெரம்பலூர்,ஆக.19:வி .களத்தூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வி .களத்தூர் அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி&மலர் தம்பதியினரின் மகள் ரேவதி(17). இவர் பெரம்பலூர் பகுதியிலுள்ள ஒரு கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரேவதிக்கு வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக பல்வேறு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றும் குறையவில்லை. வழக்கம் போல் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ரேவதி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார்.அவரது உறவினர்கள் ரேவதியை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த. ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Category: மாவட்ட செய்தி

0 comments