.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

முஹம்மத் – இங்கிலாந்தில் மிகப் பிரபலமான பெயர் - ஒரு வருடத்தில் 7455 குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டன !

Unknown | 9:56 PM | 0 comments







“முஹம்மத்” என்ற பெயர் 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்திலும் வேல்சிலும் பிறந்த குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட, இங்கிலாந்தின் மிகப் பிரபலாமான பெயராகும் என இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவரவியல் செயலகத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி Breitbart London ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


முன்னைய காலங்களில், இங்கிலாந்தின் மிகப் பிரபலமான பெயராக விளங்கிய ‘ஒலிவர்’ (Oliver) 6949 குழந்தைகளுக்குச் சூட்டப்பட்டு, இரண்டாமிடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

‘முஹம்மத்’ என்ற பெயர் வித்தியாசமான எழுத்தமைவுகளில் சூட்டப்பட்டுள்ளதை செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது. “Muhammad” – 3,499, “Mohammed” – 2,887, “Muhammad” – 1059 என இப் பெயர் பதியப்பட்டுள்ளன

‘Muhammed’ என்ற பெயர் 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மிகப் பிரபலமான பெயர்களில் மூன்றாமிடத்தில் இருந்துள்ளது. 2009 ஆம் ஆண்டளவில் பிரபலமடைந்து, 2013 இல் இங்கிலாந்தின் சம்பிரதாய பெயரைப் பின்தள்ளிவிட்டது.

பிரித்தானியாவில் சுமார் 2.7 மில்லியன் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்றனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1