பெரும்பணக்காரர்கள் அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம்!
பெரும்பணக்காரர்கள் அதிகம் பேரை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. நியூ வேர்ல்டு வெல்த் அமைப்பு உலகின் பெரும் பணக்காரர்கள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பதை கணக்கிட்டு பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரூ. 600 கோடிக்கும் (10 மில்லியன் டாலர்) மேல் தனி நபர் சொத்து வைத்துள்ளவர்களை அந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.
அந்த பட்டியலில் எந்தெந்த நாடுகள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்ற விவரம் வருமாறு.
1. அமெரிக்கா - 183,500 பெரும்பணக்காரர்கள்
2. சைனா - 26,600
3. ஜெர்மனி - 25,400
4. இங்கிலாந்து - 21,700
5. ஜப்பான் - 21,000
6.சுவிட்சர்லாந்து - 18,300
7. ஹாங்காங் - 15,400
8. இந்தியா - 14,800
இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களில் 2,700 பேர் மும்பையில் உள்ளனர். அதிகம் பெரும் பணக்கார்களை கொண்ட நகரங்கள் பட்டியல் கீழ்வருமாறு
1. ஹாங்காங் - 15,400
2.நியூயார்க் - 14,300
3. லண்டன் - 9,700
4. மாஸ்கோ - 7,600
5. லாஸ் ஏஞ்சல்ஸ் - 7,400
6. சிங்கப்பூர் - 6,600
ஜுன் 2014 நிலவரப்படி தற்பொழுது உலகில் 1.3 கோடி பேர் 60 கோடி ரூபாய்க்கும் (1 மில்லியன் டாலர்) அதிகம் சொத்து வைத்துள்ளனர். அதில் 495,000 பேர் ரூ. 600 கோடிக்கும் (10 மில்லியன் டாலர்) அதிகம் சொத்து மதிப்பு உள்ளவர்கள்.
Category: மாநில செய்தி
0 comments