இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவிகிதமாக அதிகரிப்பு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்றும், மத்தியில் மோடி தலைமையிலான நிலையான ஆட்சி இருக்கும் என்றும் நம்பிக்கை அதிகரித்துள்ளது தான் இதற்கு காரணம் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் தற்போதைய முதற் காலாண்டில் மட்டும் 5.7 சதவிகிதம் பொருளாதார வளர்ச்சியை நாடு கண்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சுரங்கம், சேவை, தொழில் துறை முதலிய துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம் என்றாலும், இவற்றில் முதலீடு அதிகரித்துள்ளமைக்குக் காரணம் என்று பார்க்கும்போது, மோடி தலைமையில் மத்தியில் நிலையான ஆட்சி அமையும் என்கிற நம்பிக்கைதான் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
நடப்பு காலாண்டில் மட்டும் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.7 சதவிகிதம் எனும் பட்சத்தில் ஆண்டின் இறுதியில் இது இன்னும் அதிக சதவிகிதத்தைப் பெறும் வாய்ப்புக்கள் உள்ளன என்றும் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.
Category: மாநில செய்தி
0 comments