.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

உடம்பில் 453 துளைகள் இட்டு கின்னஸ் சாதனை படைத்தவர் துபாய் விமான நிலையத்தில் தடுத்து வைக்கபட்ட சம்பவம்!

Unknown | 9:28 PM | 0 comments



கின்னஸ் புத்தகத்தில் தங்களின் பெயர்களும் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக பல மனிதர்கள் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுவது வழமை பொதுவாக இப்படி படைக்கப்படுகின்ற சாதனைகள் அனைத்தும் ”கரணம் தப்பினால் மரணம்” என்கின்ற அடிப்படைக்கு அமைய தங்களின் உயிர்களை பணயம் வைத்தே படைக்கிறார்கள் அந்த வகையில், தனது உடம்பில் மொத்தமாக 453 துளைகள் இட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதித்திருப்பவர் 55 வயதுடைய Rolf Buccholz என்பவர் இவரின் சொந்த நாடு ஜெர்மன்.

பச்சை குத்துவதில் ஆரம்பித்த இவர் சிறிது சிறிதாக துளைகள் இட ஆரம்பித்து பின்னர் அதை பெரிய துளைகளாக்கி கொண்டவர். துபாயில் அமைந்துள்ள பயர் மௌன்ட் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடக்கவிருக்கின்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது அதை ஏற்று ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு வருகை தந்த அவரை விமான நிலையத்தில் தடுத்து வைத்திருக்கிறார்கள் பாதுகாப்பு ஊழியர்கள். உடனடியான காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை,

பாதுகாப்பு காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது..

 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1