எறையூர் -சின்னாறு ஜவுளி பூங்கா அமைப்பதற்க்காக அரசு நிலத்தை ஆக்கிரமித்த 2 பேர் கைது!
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள எறையூரில் தமிழக அரசு சார்பில் ஜவுளி பூங்கா அமைப்பதற்க்காக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த நிலத்தின் ஒரு பகுதியில் எறையூர் நரி ஓடையை சேர்ந்த சிலர் டிராக்டர் கொண்டு உழவு ஓட்டிக்கொண்டு இருந்தனர். தகவலறிந்து எறையூர் கிராம நிர்வாக அதிகாரி நல்லுசாமி, உதவியாளர் முருகானந்தம் ஆகியோர் நில ஆக்கிரமிப்பு பகுதிக்கு சென்று உழவு செய்தவர்களிடம் இது அரசு நிலம் இதில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என கூறினர்.
ஆனால் இதனை கேட்காமல் எறையூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி ( வயது40 ), ராஜா (35), நம்பியார் (52), ஜீவா (37), கணேசன் (35), காஞ்சானா ( 40), சாந்தா (45) ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி நல்லுசாமியிடம் பணி செய்ய விடாமல் தகராறு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி நல்லுசாமி மங்களமேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கிராம நிர்வாக அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி, ராஜா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments