.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

சென்னை விமான நிலையத்தில் 24–வது முறையாக விபத்து: லிப்ட் சுவரில் இருந்த கிரானைட் கற்கள் விழுந்ததால் பரபரப்பு!

Unknown | 8:37 PM | 0 comments

.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் 24–வது முறையாக உள்நாட்டு முனையத்தில் உள்ள லிப்ட் சுவரில் இருந்த கிரானைட் கற்கள் விழுந்ததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
தொடரும் விபத்துக்கள்சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இதுவரை புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் மேற்கூரைகள் 9 முறை இடிந்து விழுந்துள்ளன.
அதேபோல் 3 முறை லிப்ட் அறையின் சுவரில் பதிக்கப்பட்டிருந்த கற்களும், 11 முறை கண்ணாடிகளும் இடிந்து விழுந்து உள்ளன. இவ்வாறு இதுவரை 23 முறை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
லிப்ட் சுவர் கற்கள் விழுந்தனஉள்நாட்டு முனையத்தில் வருகை பகுதியில் இருந்து புறப்பாடு பகுதிக்கு செல்ல லிப்ட் வசதி உள்ளது. நேற்று பகல் 12.30 மணியளவில் லிப்ட் அறையில் ஒட்டப்பட்டிருந்த 1 அடி உயரம் 5 அடி அகலம் கொண்ட 5 கிரானைட் கற்கள் திடீரென நொறுங்கி கீழே விழுந்தன. சத்தம் கேட்டு அங்கு இருந்த பயணிகளை வரவேற்க காத்திருந்த உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து உடைந்த கற்களை அகற்ற முடிவு செய்தனர். இந்த சம்பவம் பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கண்ணாடி, கற்கள் அடிக்கடி விழுவது பயணிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்,

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1