.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வி.களத்தூர் உட்பட,பெரம்பலூர் மாவட்டத்தில்,காவல் நிலையங்களில் வீணாகும் மோட்டார் சைக்கிள்கள்!

Unknown | 9:26 PM | 0 comments




பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், பல ஆண்டுகளாக ஏலம் விடப்படாமல் காவல் நிலையத்திலேயே கிடந்து வீணாகி வருகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கையின் போது, மது அருந்தி வாகனம் ஓட்டுவோரின் வாகனங்கள், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செல்லும் வாகனங்களும், விபத்தில் சிக்கி சேதமடைந்த வாகனங்கள், கடத்தல் தொழிலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் என பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய வாகனங்களை போலீஸார் கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்கின்றனர்.

இவற்றோடு, மோட்டார் வாகன ஆய்வாளர்களின் வாகனத் தணிக்கையின் போது கைப்பற்றப்படும் வாகனங்களும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகின்றன. அவ்வாறு கைப்பற்றப்படும் வாகனங்களில் மது அருந்திவிட்டு ஓட்டிய வாகனங்களும், விதிமுறை மீறிய வாகனங்களும் காவல் நிலைய கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டு, குற்றச்செயலுக்கு ஆளான நபர் தண்டனை பெற்ற பிறகு, அல்லது அபராதம் செலுத்திய பிறகு போலீஸாரே உரிய நபர்களிடம் ஒப்படைப்பது வாடிக்கை.

ஆனால், கடத்தல், விபத்து, உரிய ஆவணமின்றி மோட்டார் வாகன ஆய்வாளரால் பிடிக்கப்படும் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் வழக்குகள் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் வருவதால், அவை வழக்கு முடிந்த பிறகே உரியவரிடம் ஒப்படைப்பது நடைமுறை.

அவ்வாறு நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களை நீதிமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து ஆண்டுக் கணக்கில் திறந்தவெளியில் காவல் நிலைய வளாகத்திலேயே வைக்கப்படுவதால், வெயிலில் காய்ந்தும், மழை, பனியில் நனைந்தும் பல லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்கள் உரியவருக்கு கிடைக்காமலும், யாருக்கும் எவ்வித பயனுமின்றி துருப்பிடித்தும் வீணாகி வருகின்றன.

போலீஸாரிடம் சிக்கும் வாகனங்களில், ஒரு சிலவற்றை மட்டுமே உரியவர்கள் முறைப்படி திரும்பப் பெற்றுச் செல்கின்றனர். உரிய ஆவணமின்றியும், திருடப்பட்டவையாகவும் இருந்தால் அவற்றை யாரிடமும் ஒப்படைக்க முடியாமல் காவல் நிலையத்திலேயே வைத்திருப்பதால் அவை பயனற்றுப் போகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், மருவத்தூர், குன்னம், மங்கலமேடு, கை.கைளத்தூர், வி.களத்தூர், அரும்பாவூர் ஆகிய காவல் நிலைய போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல ஆண்டுகளாக எவ்வித பாதுகாப்பும் இன்றி சம்பந்தப்பட்ட காவல் நிலைய வளாகத்திலேயே துருப்பிடித்து கிடக்கின்றன.

எனவே, இந்த வாகனங்களை அரசின் அனுமதி பெற்று ஏலம்விட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருவதோடு, காவல் நிலைய வளாகமும் தூய்மையாக சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாறும்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1