.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை!   துபாயில் வேலை தேடுவோரின் கனிவான கவனத்திற்கு !   உலகில் முதல் முறையாக இதய நோயாளிகளுக்கு ‘இறந்த’ இதயம் பொருத்தம்!   மருந்தில்லா மருத்துவம் - இயற்கை மருத்துவம்:-   குன்னம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்!   ‘கேம்பஸ் இண்டர்வியூ’ பலி ஆடுகளாகும் மாணவர்கள்! – அதிர்ச்சி உண்மைகள் – பதறவைக்கும் தகவல்கள்!   தமிழகத்தில் பால் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு!   பெரம்பலூரில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்!!   ஹிஜ்ரி காலண்டர் உருவான வரலாறு!   உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத் திட்ட உதவிகள் பெறலாம்- கலெக்டர் தரேஸ் அஹம்மது அறிக்கை!    undefined

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நான் தான் திருக்குர்ஆன் பேசுகிறேன்-கீழை ஜஹாங்கீர் அரூஸி

Unknown | 1:12 PM | 0 comments




என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே ! உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவிட வேண்டும் என்பதுதான் எனது ஆவல்.

அதற்காகத்தான் நானும் உங்களுக்காக இறைவனிடமிருந்து இறக்கி அருளப்பட்டிருக்கிறேன்.

நான் சுவர்கத்தின் லவ்ஹூல் மஹ்பூல் என்னும் ஏட்டில் வசித்து வருபவன்.

இவ்வுலகில் நான் முதன்முதலில் ஆரத்தழுவி கட்டி அனைத்து முத்தமிட்டது நமதருமை நாயகம் { ஸல் } அவர்கள். மனிதர்கள் அனைவரும் என்னை முத்தமிடுவீர்கள் .

ஆனால் நானோ எம்பெருமானாரை முத்தமிட்டவன்.என்னை சுமப்பதற்கு நாயகம் {ஸல்} அவர்கள் பட்ட ஆரம்பம் கட்ட சிரம்மத்தை நானும் எனது இறைவனுமே நன்கு அறிவோம்.

அதனை சாதாரண மனிதர்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

இத்தனை நெருக்கடிக்குள்ளும் என்னை சுமந்து எனது பெருமைகளை உணர்ந்து எனது சகவாசம் உலகம் அழியும் வரைக்கும் வாழக்கூடிய நமது உம்மத்தினர் அனைவருக்கும் வேண்டும் என்பதற்காகத்தான் ஆரம்பத்தில் என்னை மாட்டுத் தோலிலும்,மரக்கட்டைகளிலும் என்னை பதிய வைத்து என்னை ஓர் பொக்கிஷமாக உங்களிடம் ஒப்படைத்து உள்ளார்கள் நாயகம் {ஸல்} அவர்கள்.

ஆனால் நீங்களோ எனது சகவாசத்தை விரும்பாமல், சைத்தானின் சகவாசத்தை விரும்ப கூடியவர்களாக ஆகிவிட்டீர்கள் (?).

.”கூடாய் நட்பு கேடாய் முடியும் என்ற பழமொழி ” மறந்து விட்டதோ ?

என்னை மறக்க ஆரம்பித்ததும் எவ்வளவு இழிவுகளையும் சோதனைகளையும் சந்தித்து வருகிறீர்கள்.

எனது சிறப்பைப் பற்றி ஒரே வழியில் சொல்வதென்றால் “ஹுதன்னில் முத்தகீன்” இறையச்ச முடையவர்களுக்கு நேர்வழி காட்ட கூடியவனாக இருக்கிறேன்.

யார் என்னை நம்பி பின்பற்றினாலும் நிச்சயம் நான் அவர்களை ஈருலகிலும் நல்லோர்களாக வாழச்செய்வேன் என்பதை அளவு கடந்த உறுதியுடன் என்னால் கூற முடியும்.

இன்று யார் யாருக்கோ பின்னால் போய் கொண்டிருக்கும் மனிதர்களே !அவர்களெல்லாம் நாளை மறுமையில் உங்களுக்கு துணை நிற்பவர்கள் என நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.

டி.வி, என்ற இப்லீஸின் நாசகார கவர்ச்சி பெட்டிகள் வருவதற்கு முன்பெல்லாம் வீடு தோறும் குடும்ப பெண்கள் அதிகாலையே எழுந்து சுபுஹு தொழுகையை முடித்து விட்டு என்னை கரத்தில் ஏந்தி கமகமக்கும் சந்தன ஊதுபத்தியின் புகையில் எனது வசனங்களை ஓதும் போது வெளியாகும் அந்த இனிமையான ஓசை தென்றல் காற்றோடு கலக்கும் ரம்மியம் தானே. அன்றைய மக்களின் சங்கீதமாய் இருந்தது.

ஆனால் இன்றோ நள்ளிரவு வரை டி.வியில் தொடர் சீரியலை பார்த்து விட்டுஉறங்குவதால் பள்ளியில் கூறப்படும் அதிகாலை பாங்கின் ஓசைக்கு எதிர்ஓசையாய் உனது குறட்டை சத்தம் வெளியாவது இறைவனின் கோபத்திற்குரியதல்லவா?

ஓ இதயமே! படைத்தவனையே மறந்து விட்ட நீ, என்னையா கையில் எடுத்து ஓதப்போகிறாய்?

எனதருமை தெரியாத மனிதர்களே ! என்னைப்பற்றி அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.

“திருக்குர்ஆனிலிருந்து சிறதளவு கூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவர் ஆவார்” என்னை ஓதினால், பிறர் ஓதக் கேட்டால், மனனம் செய்தல் என ஒவ்வொன்றுக்கும் இறைவனிடத்தில் நற்கூலி கிடைக்கும் என்பதை மறந்து விட்டீர்களா?

வருட முழுவதும் என்னை நினைத்து வாழ்ந்த நீங்கள், இன்றோ வருடத்தில் ஒரு மாதம் ரமளானில் மட்டுமே நினைக்க கூடியவர்களாக ஆகி விட்டீர்கள்.

உன் போன்ற சந்தர்ப்ப வாத வேடதாரிகளை நாளை மறுமையில் எனது இறைவனுக்கு முன்பாக தோலுரித்து காட்டுவேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்.

அறிவுள்ளவர்களுக்கு மட்டும் உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.

யார் என்னை தங்களது நெஞ்சத்தில் வைத்து பாதுகாககிறார்களோ? அவர்களின் மரணத்திற்கு பின் மண்ணறை வாழ்க்கையின் போது வேதனையை விட்டும் கொடிய விஷமுள்ள பாம்பு, தேள் போன்ற ஐந்துகளின் தீங்கை விட்டும் நான் அவர்களை பாதுகாப்பேன்.

நாளை மறுமையிலும் இறைவனிடம் பரிந்துரைப்பேன்.என்னை சுமந்து வாழும் இதயங்கள் மட்டுமே ஈருலகிலும் ஒளிமயமாக இருக்கும்.

என்னைபற்றி இவ்வளவு கூறிய பிறகும் தினந்தோறும் நீ என்னை உன் இதயத்தில் சுமக்க மறுத்தால் நஷ்டம் எனக்கல்ல.

உனக்குத்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள் !

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1