சார்ஜாவில் ஒரு இளம் மழலையின் ஈமான் உறுதியும் நோன்பு வைப்பும்!

அப்துல்லாஹ் ! சார்ஜாவில் இருக்கிறார்.
நாலரை வயது பாலகன் ..
முந்தா நாள் தனது முதல் நோன்பை நல்லபடியாக நிறைவேற்றினான் .
நானும் அவனை பாராட்டி பதிவிட்டேன்.
அப்போதே அவன் பெற்றோர்களிடம், மிகவும் சிறு வயதாக இருப்பதால் நோன்பை தொடர அனுமதிக்க வேண்டாம் என்று கூறினேன் .
நேற்று வழக்கம் போல் காலையில் 9 மணிக்கு அவன் தூங்கி எழுந்ததும் அவன் தாயார் பால் அருந்தச் சொல்லி கொடுத்திருக்கிறார்..அவனோ," நான் நோன்பு வைத்திருக்கிறேன் என்று கூறி அதை சாப்பிட திட்டவட்டமாக மறுத்து விட்டான்.
சஹரும் சாப்பிடவில்லை..ரெம்பவும் சிறு வயது வேறு...கட்டாயப்படுத்தி கொடுத்தாலோ சாப்பிட மறுத்து அழுகிறான் ..
மாலை 5 மணிக்கு பசியால் ஒரு தடவை சிறு சினுங்கல் மட்டும்..அப்போதும் சாப்பிட மறுத்து விட்டு தன் தந்தையுடன் சார்ஜாவில் உள்ள பள்ளியில் போய் தனது இரண்டாவது நோன்பினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறான் ..
அல்ஹம்துலில்லாஹ் !
அவனது தந்தை, இதை பதிவிட வேண்டாம் என்றார் ..இருந்தும் அவனை பாராட்டுவதற்காக அன்றி வியப்பின் மிகுதியால் இதை பதிவிடுகிறேன்.
எப்படி இந்த அதிசயங்கள் நடக்கின்றன ..யார் அவனுக்கு இந்த ஈமானின் உறுதியை இந்த மழலைப் பருவத்தில் ஊட்டியது ?
யா அல்லாஹ்! எல்லாம் அறிந்தவன் நீ ஒருவனே!
யா அல்லாஹ்!
யாருக்கோ பாடம் சொல்ல இவனை நீ கருவியாக்கி விட்டாயோ !
இதே வேளை அங்கு பாலஸ்தீனத்தில் இவனையொத்த இளம் பிஞ்சுகள் நோன்பு வைத்த நிலையிலேயே கொத்து கொத்தாக செத்து மடிகின்றன. என்ன ஒரு கொடுமை இது..
என்னால் அழக் கூட முடியவில்லை ..
யா இறைவா! எங்களின் பிரார்த்தனைகளுக்கு செவி சாய்க்கிறாயோ இல்லையோ இந்த பாலகன் தன் அறியா வயதில் உனக்காக பட்டினியால் நோன்பு வைத்தானே அவன் பொருட்டாவது பாலஸ்தீனத்தில் அமைதியை தா!
அங்கு செத்து மடியும் எம் குழந்தைகளை காப்பாற்று!!
இஸ்லாத்தின் எதிரிகளை அழித்து விடு!!!
தகவல்: சுல்தான் - B.E
Category: துபாய், வளைகுட செய்தி

0 comments