.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

வேப்பந்தட்டை புதிய அரசு கல்லூரியில் இன்று முதல் வகுப்பு துவக்கம்!

Unknown | 10:09 PM | 0 comments


பெரம்பலூர், ஜூலை 7:
வேப்பந்தட்டையில் முதன் முறையாக இரு பாலருக்கான புதிய அரசுக்கல்லூரி உதயம். இன்று(7ம்தேதி)முதல் வகுப்புகள் துவங்குகிறது.
தமிழகத்தின் மையப்பகுதியில் உள்ள மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் உள் ளது. இது 2எம்எல்ஏ தொகுதிகளையும், அதில் 4 ஊராட்சி ஒன்றியங்களையும் மட்டுமே கொண்ட மிகச்சிறிய மாவட்டமாகும். மிகவும் பின்தங்கிய, வறண்ட மாவட்டமென பெயரெடுத்துள்ள இந்த மாவட்டத்தில் கடந்த 15ஆண்டுகளில் மிகப்பெரிய கல்விப் புரட்சி ஏற்பட்டு வருகிறது. காரணம் 1 மருத்துவக் கல்லூரி, 8பொறியியல் கல்லூரிகள், 1 வேளாண் கல்லூரி, 1 மேலாண்மை கல்லூரி, 7 கலை அறிவியல் கல்லூரிகள், 7தொழில் நுட்பக்கல்லூரிகள், 10 கல்வியியல் கல்லூரிகள், 5 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 2 தொழிற்பயிற்சி நிறுவனங்கள் என உயர் கல்விக்கான வசதிகள் பெருகியுள்ளன. அரசு மருத்துவ கல்லூரியும், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கிடப்பிலுள்ளது
கலைஅறிவியல் கல்லூரிகளில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் குரும்பலூர், வேப்பூர் (மகளிர்)ஆகிய 2 இடங்களில் உள்ளன. இந்நிலையில் தமிழகஅரசால் வேப்பந்தட்டையில் புதிய அரசு கலைஅறிவியல் கல்லூரி அறிவிக்கப் பட்டு இன்று(7ம்தேதி)முதல் உதயமாகிறது. வேப்பந்தட்டை பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் எதிரே புதிய அரசு கலைஅறிவியல் கல்லூரிக்கான சொந்தக்கட்டிடம் கட்டப்படவுள்ள நிலையில் தற்காலிகமாக வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்திலும், ஒன்றிய அலுவலகத்திலும் 5 வகுப்பறைகளை கொண்டு இயங்கவுள்ளது. உயர்கல்வி மேம்பாட்டிற்கென புதிதாகத் தொடங்கப்படுகிற வேப்பந்தட்டை அரசுகலைக்கல்லூரி மேலும் மேலும் புதிய இளநிலை, முதுகலை பட்ட வகுப்புகளுடன், ஆராய்ச்சிக்கான பட்டவகுப்புகளையும் கொண்டு வளர்ந்திட பெற்றோர் களும் சமூகஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1