துபாயில் இன்று அதிகாலையில் லேசான நிலநடுக்கம் !
அமீரகப்பகுதிகளில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் ( இந்திய நேரப்படி மணி 7.05 ) லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் துபாய், ஷார்ஜா, அபூதாபி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிஷ் தீவில் 30 மைல் தூரத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்றும், இது ரிக்டர் அளவில் 5.6 என கணக்கீடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Category: துபாய்
0 comments