.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி !

Unknown | 3:05 PM | 0 comments


குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற இஃப்தார் !
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவில் இஃப்தார் விருந்துகளை அரசியல் மயமாக்கும் வேலையை 34 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1980 ஆம் ஆண்டில் துவக்கி வைத்தார்.

34 ஆண்டுகால இஃப்தார் அரசியல் வரலாற்றில் புதிதாக இந்த ஆண்டு ஒரு மாற்றம் நடைபெற்றுள்ளது.பிரதமர் பங்கேற்காத இஃப்தார் விருந்து கடந்த 21ந் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றுள்ளது.


இந்த இஃப்தார் விருந்து குறித்து பத்திரிக்கைகளுக்கு எந்த அறிவிப்பையும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து வெளியிடப்படவில்லை.

இந்த விருந்து தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப் பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் புகைப்பட ஆல்பத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வான் நெஜ்மா ஹெப்துல்லா முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் மஸ்ஜிதில் ஒதப்பட்ட குர்ஆனை கத்தம் செய்யும் நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி பங்கேற்றதாக கூறப்பட்டாலும் அது தொடர்பான புகைப்படம் கமெண்ட் பகுதியில் காண்க..

தகவல் : TwoCircles.net
படங்கள்: President of India
தமிழில் : Kollumedu Rifayee



Like


Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1