விமான நிலையத்தில் 22வது விபத்து!
சென்னை: சென்னை விமானநிலைய சர்வதேச முனையத்தின் பயணிகள் புறப்பாடு பகுதி 2வது தளத்தில், பயணிகளின் உடமைகள் சோதனை முடிந்து கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்துக்கு செல்லும் பகுதியில் சுமார் 40 அடி உயரத்தில் கண்ணாடி சுவர் உள்ளது. இந்த சுவர் நேற்று மதியம் 3 மணிக்கு பயங்கர சத்தத்துடன் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக கீழே விழாமல் அந்தரத்தில் தொங்கியபடி கண்ணாடிகள் இருந்தது. இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அலறியடித்து ஓடினர். விமானநிலையத்தில் 22வது முறையாக இதுபோன்ற விபத்து நடக்கிறது.
Category: மாநில செய்தி


0 comments