பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை! கலெக்டர் அழைப்பு !
பெரம்பலூர்,ஜுலை,13:
சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்விஉதவித் தொகையினைப்பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் (பொ) தரேஸ்அஹமது தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது :
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட கல்விநிலையங்களில் 1ம்வகுப்பு முதல் 10ம் வகுப்புவரை பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சிவகுப்பைச் சார்ந்த சிறுபான்மை யின மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை (
றிக்ஷீமீனீணீtக்ஷீவீநீ ஷிநீலீஷீறீணீக்ஷீsலீவீஜீ)
திட்டத்தின்கீழ் 2014&2015ஆம்ஆண்டிற்கு கல்வி உதவித்தொகையினைப் பெற விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகைபெற மாணவ, மாணவியரின் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டுவருமானம் ரூ1இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில் (1ம்வகுப்பு நீங்கலாக) 50 சதவீத மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றுத் தேர்ச்சிபெற்றிருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் இதர துறைகள், நலவாரியங்கள்மூலம் 2014&2015ஆம்ஆண்டில் கல்விஉதவித் தொகை பெறுதல் கூடாது. குடும்பத்தில் அதிகபட்சம் இருவருக்குமட்டும் இக்கல்வி உதவித்தொகை வழங்கப்ப டும்.குறைந்த வருமானம் பெறக்கூடிய குடும்பத்திலுள்ள மாணவ,மாணவியருக்கு முன் னுரிமை வழங்கப்படும். மாணவ, மாண விகள் புதியது, மற்றும் புதுப் பித்தல் கல்விஉதவித்தொகை விண் ணப்பங்களை
http://www.bcmbcmw.tn.gov.in/
என்ற இணையதள முகவரியிலிருந்து டவுன் லோடு செய்யவேண்டும். பிறகு அதனைப் பூர்த்திசெய்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் ஆகஸ்டு 1ம்தேதிக் குள் சமர்ப்பிக்கவேண்டும். கல்விநிலையங்கள் மாணவ, மாணவியரிடமிருந்துபெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைச் சரி பார்த்து அதற்கான கேட்புப் பட்டி யலை உரியபடிவத்தில் பதிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலு வலரிடம் ஆகஸ்டு 15ம்தே திக்குள் அனுப்பிவைத்திட வேண்டும்.
எனத் தெரிவித்துள்ளார்.
Category: மாவட்ட செய்தி


0 comments