.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

நாடு முழுவதும் வெங்காயம் விலை கடும் உயர்வு! 4 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு!

Unknown | 10:39 PM | 0 comments

புதுடெல்லி: விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் உட்பட நான்கு நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் வெங்காயம் விலை விறு விறுவென ஏற்றம் கண்டுள்ளது. கிலோ ரூ.10-ஆக இருந்த வெங்காயம் தற்போது ரூ.40 வரை விற்கபடுகிறது. பருவமழை பொய்த்து விட்டதால் வரத்து குறைந்து விட்டதாக விவசாயிகள் கூறியபோதும் பதுக்கலே விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் என்று மத்திய அரசு தெரிவித்தது. 

இந்நிலையில் விலையேற்றத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான், மலேசியா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவுக்கு அடுத்தவாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தலைநகர் டெல்லியில் வெங்காயம் விலையைத் தொடர்ந்து தக்காளி விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1