.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

துபாயை போன்று இந்தியாவும் செய்தால் என்ன?

Unknown | 1:30 AM | 0 comments





ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள்
எதுவுமே கிடையாது. ஏரிகளும் கிடையாது. ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது.


கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள் பயன்படுத்திய பிறகு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்களுக்கும், பூங்காக்களுக்கும் பாய்ச்சப்படுகிறது.


அந்த நீர் விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. விலைக்கு வாங்கப்பட்ட நீரைக்கொண்டு பாலைவனத்தில் பசுமை குடில்கள் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.


அப்படி பசுமை குடில்களில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி செடிகள்தான் மேலே உள்ள படம். கடந்த ஆண்டு மட்டும் UAE 38,000 டன் காய்கறிகளை விளைவித்து 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறது.


2020ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 40% காய்கறிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.


தக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரிக் காய்,கத்தரிக்காய் என ஒவ்வொரு காய்கறியாக பயிரிட்டு வந்தவர்கள் தற்போது கோதுமை பயிரிட்டு அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.


இதே வேகத்தில் போனால் பாலைவனத்தில் நெல் அறுக்கும் காலம் விரைவில் வந்தாலும் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்போது விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற மாட்டார்கள்.


இங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் என்பதால் மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


முற்றிலும் பாலைவன தேசமான இங்கு மழை பொழிவின் அளவு மிக குறைவு. சொட்டு நீர் பாசனம்தான் இங்கும் கைகொடுக்கிறது.


நீர் பாசன முறையில் நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.


நம் நாட்டில் நீர்வளம் குறைவான பகுதியில் இதே போன்ற முறையை பின்பற்றி நாமும் விவசாயம் செய்ய முயற்சி செய்யலாமே.....

 

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1