பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் அனலில் அவதிப்படும் நிலை!!
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகள் கடும் அனலில் அவதிப்படும் நிலை இருக்கிறது. மருத்துவமனைக்கு உள்ளே காற்று வசதி இல்லாததால் வெளியே வந்து புழுக்கத்தில் இருந்து தங்கள் குழந்தைகளை காத்து வருகின்றனர் குழந்தையின் உறவினர்கள்.
குழந்தைகள் பகுதிக்கு மட்டுமாவாது குளிர்சாதன வசதி வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.
அதிகப்படியான வெப்பத்தால், பச்சிளம் குழந்தைகளுக்கு தோல் நோய்கள் வருவதாகவும் குழந்தையின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இது ஓரு புறம் இருக்க தண்ணீர் பற்றாக்குறையும் இங்கு நிலவுவதாக கூறுகின்றனர் பொதுமக்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், குளிர்சாதன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டப் பின்னும், மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
Category: மாவட்ட செய்தி
0 comments