.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... புஷ்ரா நல அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது.! உங்கள் தேவையே!! எங்கள் சேவை!!

பெரம்பலூரில் மொபைல் பழுது நீக்கல் இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு!

Unknown | 3:04 AM | 0 comments



 


பெரம்பலூர்,: பெரம்பலூரில் ஐஓபி கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக மொபைல் பழுது நீக்கல் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து வங்கியின் பயிற்சி மைய இயக்குநர் பார்த்தசாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பெரம்பலூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தப் பயிற்சி மையத்தில் ஜூலை மாதம் 23ம்தேதி முதல் மொபைல் பழுது நீக்கல் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் சேர விருப்பமுள்ளவர்கள், 18 வயதிற்கு மேலும் 35 வயதிற்குக் குறைவாக உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8ம்வகுப்பு படித்தவராக இருத்தல் வேண்டும்.பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். சுயதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.இந்தப்பயிற்சி தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறவுள்ளது. அதிநவீன உபகரணங்களைக் கொண்டு பயிற்சி சிறந்த முறையில் அளிக்கப்படும். ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ்போன் உட்பட அனைத்து கைப்பேசிகளையும் பழுது நீக்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையாகும். பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் நபர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன் இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் ரங்காநகர் ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித்தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாளஅட்டை, பள்ளியின் மாற்றுச்சான்றிதழ் ஆகியற்றின் நகல், 4 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களை அறிந்து கொள்ள ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், ரங்கா நகர், ஆத்தூர் ரோடு, பெரம்பலூர் 621212 என்ற முகவரியிலோ அல்லது தொலைபேசி எண் 04328 277896 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.பெரம்பலூரில்
உணவு மானியம் உயர்த்தகோரி சத்துணவு ஊழியர்கள் பேரணிபெரம்பலூர்,: பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் முதல் அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை பேரணி நடந்தது.
அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தை மேம்படுத்திட உணவு தயாரிப்பு செலவிற்கு வழங்கும் அரசு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது. மாவட்டத்தலைவர் செல்லப்பிள்ளை தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி வரவேற்றார். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் அழகர்சாமி பேரணியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் பெரியசாமி, பொருளாளர் பாலுசாமி உள்பட சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Category:

About GalleryBloggerTemplates.com:
GalleryBloggerTemplates.com is Free Blogger Templates Gallery. We provide Blogger templates for free. You can find about tutorials, blogger hacks, SEO optimization, tips and tricks here!

0 comments

ads2

Catwidget2

Catwidget1